Breaking News

வாஸ் குனவர்தன மீது பயங்கவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரனை : மேலும் பல கொலகளுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகம்.

60733பம்பலப்பிட்டி பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் கடந்த 22 ஆம் திகதி குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மர்மமான முறையில் இடம்பெற்ற குறித்த கொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக தெரிவித்து கடந்த 6 ஆம் திகதி பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் வாஸ் குணவர்தனவை விசாரணைகளுக்குட்படுத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்தனர். எனினும் பொலிஸ் மா அதிபர் வெளிநாடு சென்றமையை தொடர்ந்து வாஸ் குணவர்தன மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. பொலிஸ் மா அதிபர் என் கே இளங்ககோன் நாடு திரும்பியுள்ள நிலையில் வாஸ் குணவர்தனவை விசாரணை செய்வதற்கு அனுமதியளித்தார்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன நேற்று முன் தினம் (10) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாஸ் குணவர்தனவிற்கான மேலதிக விசாரணைகளுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் சுமார் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு வாஸ் குனவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு மேலும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புகள் இருக்களாம் என சந்தேகிக்கப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

பிரதிப் பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது

உயிர் நன்பனால் பறிக்கப்பட்ட உயிர் : பம்பலப்பிட்டி கொலை அதிர்ச்சித் தகவல்கள்

பிரதிப் பொலீஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன கைது செய்யப்படலாம்?

முஸ்லிம் வர்த்தகர் கொலை: 3 பொலிஸ் அதிகாரிகள் கைது

21 கோடி ரூபா கடனே கொலைக்கு காரணம்

No comments