Breaking News

இலங்கையர்கள் கொலை செய்யப்படுவதற்கு பொலிஸ் மா அதிபரே பொறுப்பு - பொன்சேகா குற்றச்சாட்டு!

sarath-fonseka இலங்கையர்கள் பலர் கொலைசெய்யப்படுவதற்கு காரணமாகவிருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அவரின் கீழிருக்கும் அதிகாரிகளின் நடத்தைக்கு பொலிஸ் மா அதிபர் என்.இளங்ககோன் பொறுப்பேற்கவேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். பொலிஸ் உயரதிகாரி தனது கடமையை சரியாக செய்தால் இப்படியான விடயங்கள் இடம்பெற்றிருக்காது என்றும்; அவர் சுட்டிக்காட்டினார். பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் இவ்வாறான குற்றத்தை இழைத்ததாக கூறப்படுவது பொலிஸ் திணைக்களத்தில் பல பிரச்சினைகள் இருப்பதனை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

எனவே, பொலிஸ் அதியுயர் அதிகாரி தற்போது நடப்பவற்றுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அரச சாட்சியாக மாற்றப்பட்டு இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துப்போக விடப்படுவார் என்பதனையிட்டு தான் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரி வாஸ் குணவர்தன ஓர் உயர்பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் நெருங்கிய கூட்டாளி அதனால் தான் இவரது கேள்விக்குரிய கடந்தகாலத்தையும் உதாசீனம் செய்து இவருக்கு பிரதிபொலிஸ் மா அதிபரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments