இன, மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வாசுதேவ
இன, மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடியவாறு சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இது தொடர்பான சரத்துக்களை சேர்க்க தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத்தின் ஊடாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேச பிரேரணை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. இன மற்றும் மத ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சில சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments