மேர்வின் சில்வாவின் இணைப்பு செயலாளரிடம் கப்பம் கோரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்?
கொழும்பு வடக்குப் பிரதிக் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடமும் கப்பம் பொற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த அமைச்சர் மேர்வினின் இணைப்பு செயலாளரான சிங்கப்பூர் சரத் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சரத்தின் பெயர் போதைப் பொருள் கடத்துவோரை கொலை செய்யும் பட்டியலில் காணப்படுவதாக வாஸ் குணவர்தன தெரிவித்திருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாமின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அவரின் பதவியும் இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
No comments