13ஆவது அரசமைப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இனவாதத்தைத் தூண்டுகின்றன!

Jo UNP13ஆவது அரசமைப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இனவாதத்தைத் தூண்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

13ஆவது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் இறுதியில் பிரிவினைவாதிகளுக்கே சாதகத்தை ஏற்படுத்துமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா கூறியுள்ளார்.

30 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளினால் எட்ட முடியாத இலக்குகளை, பிரிவினைவாதிகள் எட்டுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

13ஆவது அரசமைப்பிற்கு எதிர்ப்பை வெளியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பங்காளி கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென்றும் மைக்கேல் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

No comments