பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது
பம்பலபிட்டிய முஸ்லிம் வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காலை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் காரியாலயத்துக்கு வரவழைக்கப்பட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மாலை 6 மணிக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக குறித்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட வரத்தகரின் நண்பரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மேலும் 3 பொலிசார் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
உயிர் நன்பனால் பறிக்கப்பட்ட உயிர் : பம்பலப்பிட்டி கொலை அதிர்ச்சித் தகவல்கள்
பிரதிப் பொலீஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன கைது செய்யப்படலாம்?
No comments