உலமாக்களுக்கு பல்கலைக்கழகமா? விடமாட்டோம் என்கிறது பொதுபல சேனா; அம்பாறையில் முழக்கம்!
பொதுபல சேனாவின் கூட்டம் நேற்று (9) அம்பாறை நகரில் நடைபெற்றது.
பொதுபல சேனவின் செயலாளர் ஞானசார தேரர் அங்கு பிரதான உரை நிகழ்த்தினார்.
“காத்தான்குடியில் அமைக்கும் உலமாக்களுக்கான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். இதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அம்பாறையில் இருந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இல்லா விட்டால் இதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் எதிர்ப்பையும் நாடு பூராவும் நடாத்துவோம். இப்பல்கலைக்கழம் காத்தான்குடியில் அமைந்தால் வஹாபி, சுபி ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உருவாகும்.
இப்பல்கலைக்கழகம் அமைப்பதையிட்டு எமது எதிர்பபை தெரிவிக்கின்றோம். இப்பல்கலைக்கழகத்தினால் எமது நாடு பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கும்” என ஞானதேரர் தெரிவித்தார்.
No comments