Breaking News

குவைட் மன்னருக்கு எதிராக டுவிட் செய்த பெண்ணுக்கு 11 ஆண்டு சிறை

Kuwaitகுவைட்டில் டுவிட்டரின் மூலம் அந்நாட்டு மன்னருக்கு எதிராக கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு சிறைத் தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.

குவைட் மன்னர் Sheikh Sabah al-Sabah விற்கு அவதூறு ஏற்படும் வகையிலான கருத்துக்களையும், ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்தி குறித்த பெண் டுவிட்டர் சமூக வலையமைப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த குவைட் நீதிமன்றம் 37 வயதான Huda al-Ajmi என்ற பெண்ணுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஓர் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டுவிட்டரில் மன்னருக்கு எதிராக கருத்து வெளியிட்ட மேலும் சிலருக்கு அண்மைக்காலமாக தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments