Breaking News

வாஸ் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்.

DIG-Vaas-Gunewardene குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரனை செய்யப்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன நேற்று தேசிய வைத்திய சாலையிலிருந்து சிறைச் சாலை வைட்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 13 ஆம் திகதி தடுப்பிக் காவலில் இருந்த போது சுகவீனம் காரனமாக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தடுப்பில் உள்ள வாஸ் உள்ளிட்ட குழுவினர் பமபலபிடி கோடீஸ்வர வர்த்தகர் சியாமின் கொலை சம்பத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பற்றி தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments