ஈரானின் புதிய அதிபராக ஹஸ்ஸன் ரௌஹானி (Hassan Rouhani) தெரிவு
ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மதத் தலைவரும், முற்போக்குக் கட்சிகளினால் ஆதரிக்கப்பட்டவருமான ஹஸ்ஸன் ரௌஹானி (Hassan Rouhani )வெற்றியீட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் 50 வீத்த்திற்கும் கூடுதலான அளவு வாக்குகளைப் பெற்ற ரௌஹானி வெற்றியீட்டியுள்ளார்.
மிக சொற்பளவிலான வாக்கு வித்தியாசத்தில் மீள் தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட தெஹ்ரான் மேயர் மொஹமட் பகர் கடஃப் (Mohammad Baqer Qalibaf)இற்கும், ஹஸ்ஸன் ரௌஹானி (Hassan Rouhani) யிற்கும் பாரிய இடைவெளி காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
72 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
உலகின் முக்கிய நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேணப்போவதாக Hassan Rouhani அறிவித்துள்ளார்.
ஹஸ்ஸன் ரௌஹானி (Hassan Rouhani) தேர்தலில் 50.71 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
No comments