Breaking News

பொலிஸ் உயர் அதிகாரிகள் கூலிக்காரர்களாக மாறியுள்ளனர்! ரவி கருணாநாயக்க

Ravi-K இலங்கை பொலிஸ் திணைக்களம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனியார் பாதுகாப்பு நிறுவனமாக செயற்பட்டு வருவதாக ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் கூலிக்கு கொலை செய்யும் நபர்களாக மாறியுள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பொலிஸ் திணைக்கத்திலுள்ள குற்றவாளிகளை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments