புல்லர்ஸ் லேன் பள்ளிவாசலும் அகற்றப்படலாம்..!
கொழும்பு 07, பெளத்தாலோக மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் ரஷ்ய தூதுவரலாயத்துக்கு அருகில் அமைந்துள்ள புல்லர்ஸ் லேன் பள்ளிவாசல் அமைந்துள்ள நிலத்தையும் பெற்றுத்தருமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுத்துள்ள கோரிக்கை காரணமாக பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது குறித்து ஆராயப்படுகிறது.
எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தைக்கு அருகிலேயே குறித்த ரஷ்ய தூதுவராலயம் நிர்மாணிக்கப்படுகிறது. இந்த மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் 40 வருடங்கள் பழைமைமிக்கது. 1960இலிருந்து முஸ்லிம்கள் இங்கு தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம், குறித்த பள்ளிவாசலை அகற்றிவிட்டு அரச செலவில் வேறு இடத்தில் பள்ளிவாசலை அமைத்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு நீங்கள் தயாரா என்றும் கேட்டுள்ளனர்.
இதேநேரம் இப்பள்ளிவாசலை பாதுகாத்து தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கையெழுத்துகளை திரட்டிவருகின்றனர்.
No comments