Breaking News

நான் கொலைகாரன், வெளியில் வந்ததும் நல்ல வேளை செய்வேன் : வாஸ் குணவர்தன

vass-gபம்பலபிடி முஸ்லீம் கோடீஸ்வரர் சியாமின் கொலை சம்பந்தமாக சிறை வைக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறியுள்ளார்.

பரிசோதனைகளைன் தற்போதய நிலை குறித்து கொழும்பு மேலதிக மஜஸ்ட்ரேட் ஏ.எம்.ஷஹாப்தீன் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே அவர் இவ்வாறு கூரியுள்ளார். சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தவை விசாரனை செய்து கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அவர் உற்கார்ந்திருந்த கதிரையை பின்னால் தள்ளி விட்டு “எனக்குத் தெரியும் நீர் இந்த வேளையைச் செய்வாய் என்று, ஆனாலும் உங்களால் என்னை எந்த நாளும் உள்ளே வைக்க முடியாது. ஷானி! நான் ஒரு கொலை காரன், நான் வெளியே வந்த தினத்தில் பார்த்துக்கொள் உங்களுக்கு என்ன செய்வேன் என்று” என கூறியதாக அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சு இந்த சம்பவத்தை விச்சரிக்கு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அவர்களுக்குமான கொலை அச்சுருத்தல் என குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

No comments