ஈரான் ஜனாத்பதித் தேர்தல் இன்று! எட்டு பேர் போட்டி!!
ஈரான் அரச தலைவருக்கான தேர்தல் இன்று (14) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மொத்தமாக எட்டு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பழைமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என இரு முகாம்களில் நின்று போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து ஈரான் மக்கள் தமது அடுத்த அரச தலைவரைத் தெரிவு செய்யவுள்ளனர்.
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட 600க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோதிலும் இறுதியாக 8 பேருக்கே தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பாதுகாவலர் சபை அனுமதிவழங்கியது.
இந்த பாதுகாவலர் சபை ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அல் கொமைனியின் கீழ் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தேர்தல் சட்டத்தின்படி ஒருவர் இரு தவணைக்கு மேல் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து இருமுறை அதிபர் பதவியை வகித்த அகமதி நஜாத் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments