வட, வடமத்திய, மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே தினத்தில்!
வடக்கு, வடமத்திய, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு (13) நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாகாணங்களிலும் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பாக மூன்று அமைச்சர்கள் தலைமையில் ஆளும் கட்சி குழுக்களை களமிறக்கத் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும், மத்திய மாகாணத்திற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், வடமத்திய மாகாணத்திற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறித்து இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கும் அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரிதர்ஷன யாப்பா, அதாவுத செனவிரத்ன ஆகியோரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
13ஆவது அரசமைப்பு திருத்தம் குறித்து மாகாண சபைகளின் கருத்துக்களையும் கேட்டறிவது என மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments