வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு இன்னும் பல கொலைகளுடன் தொடர்பு..?
கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு வெசாரனை செய்யப்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு மேலும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்பிருப்பதாகவும், இது தொடர்பாக தகவகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வாஸ் குனவர்தன தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருவதாக நம்பகமான உள்ளக வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.
பம்பலபிடிய முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனைகளில் மேலும் பல கொலைகள் பற்றிய தகவல்கள் கசிந்தவன்னம் உள்ளதகாக தகவலரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த சம்பவங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை மெறும் நோக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன, அவரின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் கொன்ஸ்டபல்கள் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைப்பதற்கு அனுமதியும் பறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்ட சிவிலியன்கள் இருவரும் கொழும்பு மேலதிக மஜஸ்ட்ரேட் ஏ.எம்.எம்.ஷஹாப்தீன் முன்னிலயில் கொன்டுவரப்பட்டு மஜஸ்ட்ரேட்டின் உத்தியோகபூர்வ அரையில் இரகசியமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரித்ததில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கொலைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் வேன், டபல் கெப் வண்டி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விசாரனைகள் தொடர்பான மேலதிக அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான மஜஸ்ட்ட்ரேட் நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
No comments