Breaking News

ஹஜ் கோட்டா 2800 இலிருந்து 2240ஆக குறைப்பு: அமைச்சர் பெளஸி

M_H_M_-Fowzieஹஜ் கடைமையை நிறைவேற்றுவதற்கு நாடுகளுக்கு வழங்கியுள்ள கோட்டாவை 20 சதவீதத்தால் குறைப்பதற்கு சவூதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளதால், இலங்கையிலிருந்து இம்முறை 2240 பேருக்கே ஹஜ் செய்யும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஹஜ் விவகாரங்களுப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் கலாநிதி பண்டா பின் முஹம்மத், பெளஸிக்கு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மூலம் அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்தில் ஏற்கனவே, இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்த 2800 பேர் கொண்ட கோட்டா இம்முறை 2240ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புனித மக்கா மற்றும் மதீனாவில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க வேலைகள் காரணமாக இம்முறை ஹஜ் கோட்டாவை 20 வீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்ததாக இக்கடிதத்தில் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments