Breaking News

லேசாகத் தட்டும் போது கூட தடையமின்றி அழிந்து விடுகிறோமே? ஏன்?

உம்மா அவித்துத் தந்த கோழித் துண்டுகளை சஹருக்குச் சாப்பிட எடுக்கும் போது, கோழித் துண்டுகளை வைத்திருந்த பேப்பர் சட்டென்று கண்ணில் பட்டது.

அளுத்கம, பேருவளை இனவாதத் தாக்குதல்களின் பின்னரான புனரமைப்புக்களைத் தாங்கி நின்ற அச்செய்தி, அதனூடே மீண்டும் கட்டியெழுப்ப முடியாமலிருக்கும் அவர்களது பொருளாதார பலத்தையும் சோகக் கதைகளாகச் சொல்லியாருந்தனர்.

சட்டென சில சம்பவங்கள் மனதூடே வந்து போக ஏன் இனவாதிகள் எமது பொருளாதாரத்தை மாத்திரம் குறிவைக்கிறார்கள் என என்னுள் கேள்வி எழுந்தது. சில நாட்களுக்கு முன்னர் facebook இல் ஒரு சகோதரி இட்டிருந்த பதிவில், முஸ்லீங்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்துத் தாக்கும் செய்திகள், நமக்கு ஒரு நாளைக்கு ஒரு செய்தியாக வந்து போனாலும், அது அத்தனி நபர்களின் ஆயுளில் கட்டியெழுப்பிய பொருளாதாரத்தையே முழுமையாக அழித்து விடுவதாகவும், அது அவர்களையே கொலை செய்வதற்குச் சமனாகும் என்றும் எழுதி இருந்தார்.

முஸ்லீங்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கையில் புதிதல்ல. எனக்குத் தெரிந்த வரையில் வரலாற்றில் அறியப்பட்ட முஸ்லீங்களுக்கு எதிராக உள்நாட்டில் நடந்த முதல் கலவரமான கம்பளைக் கலவரமாக இருக்கட்டும், இல்லை, மாவனல்லை, அழுத்கம, பேருவளை, தர்காநகர் கலவரங்களாக இருக்கட்டும், அவர்கள் திட்டமிட்டுத் தாக்கியது முஸ்லீங்களின் பொருளாதாரத்தைத்தான். அதேபோல் இன்று ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு கடை தீப்பற்றியதாக வந்து போகும் செய்திகளும் திட்டமிட்டு பொருளாதாரத்தில்தான் கை வைக்கிறார்கள் என்பது திண்ணமே.

அப்படியென்றால் முஸ்லீங்களை அழிக்க வேண்டுமென்றால் அவர்களது பலமான பொருளாதாரத்தை அழித்து விட்டால் போதுமே என்பதை இனவாதிகள் நன்றாய்த் தெரிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்கா வந்து சிலநாட்களில் வீதியோர உலாவரும் போது வித்தியாசமான நபர்களைக் கண்டு என்னோடு வந்த சக நண்பரிடம் "யார் இவர்கள்?" என வினவினேன். தலையில் ஒரு குள்ளத் தொப்பி, கருப்பு நிற கோட் அணிந்து இரண்டு புறமும் ஒருவகை கயிறு போன்று தொங்க விட்டிருந்தனர். "அவர்கள்தான் யூதர்கள்" என்றார் என சக நண்பன்.

அட, இவர்களா இஸ்லாத்தின் எதிரிகள் என அண்ணாந்து பார்த்து விட்டு நடையைக் கட்டினேன். நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் எந்தவொறு கடைகளிலோ, சுப்பர் மாக்கட்களிலோ, restaurant களிலோ, petrol shed களிலோ வேலை செய்வதை நான் காணவில்லை. ஆச்சரியமாக இருக்க சற்று அவர்களைப் பற்றித் தேடும் போது சில திடுக்கிடும் தகவல்களும் வந்து சேர்ந்தன. 

1. அவர்களில் யாரும் ஏழைகள் என்றில்லை என்பதாகும். அதாவது உழைப்புக்கு வழியின்றி யூதர்களில் யாராவது இருந்தாலும், அவர்களது கூட்டத்தினர் அக்குடும்பத்தினரை வெறுமனே விட்டு விடுவதில்லை. தங்கள் அனைவரும் சேந்த்து அக்குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவர்.

2. சாதாரண அமெரிக்கப் பிரஜைகள் செல்லும் பாடசாலைக்கு அவர்கள் செல்வதில்லை. அவர்களுக்கென்று தனிப் பாடசாலை, பல்கலைக்கழகம் வரை இருக்கிறது.

3. அவர்களது கோத்திரத்தில் ஒரு பெண் கர்ப்பமுற்றிருந்தால் அவளுடைய குழந்தை அறிவு பூர்வமாக வரவேண்டும் என்பதற்காக கணக்குப் பயிற்சிகள், அம்பெய்தல், IQ போன்ற பயிற்சிகளை அதிகமாக கொடுப்பார்களாம். அதனால் அவர்களது பிள்ளைகள் பிறக்கும் போது அறிவுபூர்வமாகப் பிறக்குமாம்.

4. அவர்களது பிள்ளைகள் சாதாரண எந்த வேலைகளுக்கும் அனுப்ப மாட்டார்கள். பொதுவாய் இங்கு 18 வயதைத் தாண்டி விட்டால் நீ உனது வாழ்க்கையைப் பார்த்துக்கொள் என பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி விடுவர். ஆனால் யூதர்கள் அவ்வாறு செய்வதில்லை.

5. யூதப் பெண்களோ, ஆண்களோ வேறு மதத்தினரை திருமணம் முடிக்க முடியாது, மீறி முடித்தால் அவர்கள் யூத மதத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவர்.

6. புதிதாக யாருக்கும் யூத மதத்தை ஏற்க முடியாது. அவர்கள் பரம்பறை பரம்பரையாக யூதர்களாய் வருபவர்களையே யூதனாய் ஏற்பார்கள்.

7. அவர்களில் எல்லோரும் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருப்பர்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் சாரிசாரியாக கொலை செய்த யூதர்களின் இன்றைய நிலமை இது.

உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் என்பதை விட ஆணி வேராக இருப்பதும் யூதர்கள் தான். இன்று Coca-Cola, Pepsi, YouTube, Facebook, WhatsApp, viber என அண்ட விண்வெளியில் பறக்கும் செட்டலைட்டில் இருந்து வீட்டில் இருக்கும் துடப்பக்கட்டை வரை யூதர்களது உற்பத்தியாக இருக்கிறது.

சரி, இப்போது விடயத்துக்கு வருவோம், இலங்கை முஸ்லீங்களும் சரி, உலக முஸ்லீங்களும் சரி (மத்திய கிழக்கு நாட்டவர்கள்) பொருளாதாரத்தில் King ஆக இருந்தும் ஒரு ஆணியைக் கூட பிடுங்க முடியாமலிருப்பதன் காரணமென்ன.

முஸ்லீங்களையம், யூதர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பொருளாதாரத்தில் எல்லோரும் தலை நிமிர்ந்துதானே நிற்கிறார்கள் என்று மார்பு தட்டிக் கொண்டாலும், எல்லாவற்றுக்கும் அடிப்படையான கல்வியினை விட்டு விட்டதனாலேயே நாம் பாதாளத்தில் வீழ்கிறோம்.

இன்று இலங்கையில் அந்நியர்களால் திட்டமிட்டு எமது பொருளாதாரங்களை அடித்து நொறுக்கும் போது, தமது சமுதாயத்துக்கென்று அழிக்க முடியாத ஒரு செல்வமொன்றை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையிலிருக்கிறோம்.

ஆனால் நிலையோ தலைகீழ் இங்கு. "படிக்கிறது சம்பாதிக்கத்தானே, அப்போ எதுக்கு மேற்படிப்பெல்லாம்?" என்று ஆண்களுக்கும், "பொம்பள படிச்சு என்னத்த செய்ய? கடைசியில குஷினியில வேலை செய்யத்தானே வேணும் என்று பெண்களுக்கும் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருவதனால்தான் இன்று நம் பொருளாதாரங்களைத் தட்டும் போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறோம்.

குறுகிய, உழைப்பை மாத்திரம் மையமாய்க் கொண்ட முட்டைக் கோஸ்கள் அதிகரித்தமையாலும், அவ்வாறான கல்வி நிறுவனங்கள் அனேகன முஸ்லீங்களுக்குச் சொந்தமானவையாக இருப்பதனாலும், இலாப நோக்கம், குறுகிய கால உழைப்பை மையமாய் வைத்த கற்கைநெறிகள் வந்தமையாலும் பல்கலைக்கழகங்கள் சார்ந்த இலக்குகள் தவறவிடப் பட்டதனாலும் இன்று கல்வி கற்றோர் இருந்தும், சமூகத்தில் பல பணக்காரர்கள் இருந்தும் நமது சமூகம் வீழ்ந்து கொண்டே செல்கிறது.

தெருக்கோடிகளிலிருந்து மிம்பர் மேடைகள் வரையிலும் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகளுக்கு விபச்சாரிகள் பட்டம் குத்துவதிலிருந்து ஆரம்பமாகிறது எமது சமுதாயத்தின் வீழ்ச்சி. அப்பாஸிய, உஸ்மானிய முஸ்லீங்களின் கல்வி வளர்ச்சிகளை கல்விக்கான உதாரணமாய் சொல்லி மார்பு தட்டிக்கொள்ளும் இதே தொப்பி தாடிக்காரர்கள்தான் இன்று முஸ்லீம் மாணவிகளுக்கு விபச்சாரப் பட்டம் குத்தி விட்டு நாளை "பெண்களுக்கு பிள்ளைப்பேற்றின் போது பெண் வைத்தியர்கள் இல்லாதவிடத்து ஆண்களிடம் போவதில் தப்பில்லை" என பத்வாக்களையும் அள்ளி வீசுகிறது.

இத்தடைகளையெல்லாம் தாண்டி கல்வியில் எமது சமூகம் என்று முன்னேறுகிறதோ அப்போதுதான் அசைக்க முடியாத ஒரு சமுதாயமாய் வரும். அதுவரை எட்டு ரகாஅத்தா, இருபது ரகாஅத்தா என்று சண்டையிட்டுக் கொண்டும், வருடாவருடம் ஹஜ், உம்ரா செய்து ஹாஜியார் பட்டம் சூட்டிக் கொண்டும், கத்தம் கந்தூரி கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டும் இருக்கும்.

"சிங்ஹல மோடயோ, கெவும் கண்ட யோதயோ" என்ற முதுமொழி 

"தம்பிலா மோடயோ... வடலப்பம் கண்டனம் யோதயோ" என்று மாறுவதற்கான நாட்கள் வெகுதூரத்திலில்லை.

இனியாவது விழித்தெழுவோமே?

No comments