பொதுபல சேனாவினை மொஸாட் வழிநடத்தலாம் - முஜிபுர் ரஹ்மான்
தமிழில்:எம்.ஐ.அப்துல் நஸார்
புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும்
பௌத்த அமைப்பான பொதுபல சேனா வெளிநாட்டு சக்திகளால் வழிநடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீவிரவாத அமைப்பு வெறுப்புணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு நிதியுதவியளிப்பதும் தூண்டுகோலாக இருப்பதும் யாரென கண்டறிவதற்கு இலங்கையின் புலனாய்வுத்துறை விசாரணை செய்ய வேண்டும் எனவும் சிலோன் டுடேக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சிங்கள சமூகத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவானவர்களையே இவ்வியக்கம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வினவப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதில்களும்
கே: தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பில் நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறீர்கள். இப்போது நாம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் இப்பிரச்சினை புதிதானதொன்றல்ல. தற்போதைய சூழ்நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
கடந்த சில வருடங்களாக உச்ச அளவிலான தீவிரவாத செயற்பாடுகளைப் பார்க்கிறோம். எனவே, இதனைச் சகித்துக்கொள்ள முடியாது எனவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் காரணமாக தீவிர செயற்பாடுகள் ஓரளவு குறைவடைந்துள்ளன. எனினும் சில பகுதிகளில் பயங்கர மற்றும் வன்முறையான தனித்தனி சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கே: முந்தைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமைக்குக் காரணம் அப்போது இடம்பெற்ற பயங்கரவாத மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியமையாகும். அதேபோன்று அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றிருந்தனர். அரசாங்கம் மாற்றம் பெற்றிருந்த போதிலும் தீவிர செயற்பாடுகள் இந்த அளவிற்கு சகித்துக் கொள்ளப்பட்டது ஏன்?
முந்தைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமைக்குக் காரணம் எதிர்ப்புணர்வினால் தூண்டப்பட்ட பயங்கர மற்றும் வன்முறைச் சம்பவங்களாகும். நாம் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியபோது அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவததைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுத்ததோடு சட்டம் ஒழுங்கினை சீர்குலைப்போர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
வெறுப்புணர்வுப் பேச்சுக்கு எதிரான சட்டமூலம் அதன் ஒரு பகுதியாகும். எமது விஞ்ஞாபனத்திலும் அது உள்ளடக்கப்பட்டிருந்த விடயமாகும். அச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அரசாங்கம் நல்லிணக்கம், புனர்வாழ்வு மற்றும் சமாதான சகவாழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இந்தவேளையில் சமாதான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளமை தெளிவாகிறது. இது முஸலிம்களுக்கு எதிரான இயக்கமல்ல. இதில் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் ஒன்று காணப்படுகின்றது.
இவ்வாறான தீவிரவாத சக்திகள் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிப்பதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை முன்வைக்கின்றன. அவர்களது நோக்கம் மிகத் தெளிவானதாகும். அவர்களது நோக்கத்தை தோற்கடிக்க நாம் மக்களை ஒன்றிணைக்க வேண்டும், அவ்வாறான செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். சமூகங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்த முற்படும் சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

கே: இலங்கையில் முஸ்லிம்களிடையே தீவிரவாதமும் தலைதூக்கியுள்ளதாக சில பௌத்த தீவிரவாத சக்திகள் குற்றம்சாட்டுகின்றன. ஏனைய சமூகங்களுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முஸ்லிம் சமூகம் கடும் பிரயத்தனம் எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் பிரதிநிதி என்ற வகையி லும், முஸ்லிம் என்ற வகையிலும் இக் குற்றச்சாட்டினை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் சம்பந்தமான கதைகள் நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது கேள்விப் பட்டவையாகும். 1980 களில் யுத்த காலத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினர். பின்னர், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றது.
இத் தாக்குதல்கள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவக் கும்பல்கள் கிராமங்களில் மேற்கொண்ட தாக்குதல்களாகும். அவ்வாறான அனைத்துத் தாக்குதல்களின்போதும் முஸ்லிம்களே கொல்லப்பட்டனர். எனினும், முஸ்லிம்கள் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை. அதேவேளை தெற்கிலும் அதுபோன்ற சம்பவங்கள் இடம் பெற்றன. அளுத்கமவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இவ்வாறான சம்பவங்களில் முஸ்லிம்கள் தமது உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தனர். மீண்டும் முஸ்லிம்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபடவில்லை. இவ்விடயம் அதனை நிரூபணம் செய்யும் தனியொரு சம்பவம் அல்ல. வடக்காக இருக்கலாம், தெற்காக இருக்கலாம் அல்லது கிழக்காக இருக்கலாம் அங்கெல்லாம் முஸ்லிம்கள் வன்முறைகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இலக்காகியுள்ளனர் என்பதே உண்மையாகும்.
எனவே இலங்கையில் முஸ்லிம்களிடையே தீவிரவாதமும் தலைதூக்கியுள்ளதாக கூறப்படுவது ஒரு கற்பனையாகும். அவ்வாறான தீவிரவாதம் இருந்திருக்குமானால் அவ்வாறானசக்திகள் தம்மைத்தாமே தற்காத்துக்கொள்ள முன்னணிக்கு வந்திருக்கும். இவை எவையும் நடைபெறவில்லை.
எனவே முஸ்லிம்களிடையே தீவிரவாதம் காணப்படுவதாக குற்றம்சாட்டுவோர் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள சமூகத்தைத் தூண்டி விடுவதற்கும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். அவர்களது நோக்கம் சிங்கள சமூகத்திற்கு மத்தியில் அச்சத்தை தோற்றுவிப்பதாகும். அந்த அச்சத்தினூடாக முஸ்லிம் சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை முறிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ்வது வெறுப்புணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சமாதான சகவாழ்வை இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறையில் உள்ளன. இங்கு அரசாங்கம் ஒன்று இருக்கிறது, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவும் செயற்படுகின்றன.
எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்து விசாரணையொன்றை மேற்கொள்ள முடியும். இவ்வாறான வெறுப்புணர்வுகளைத் தூண்டுபவர்கள் பொதுமக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்க வேண்டும் என்பதனையும், வெறுப்புணர்வு வார்த்தைகளை பிரயோகிப்பதனையும், சமூகங்களுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதையும், ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்துடன் மோத விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது, அது நாட்டை சீரழித்துவிடும்.

கே: சில இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது. அதன் காரணமாக கிழக்கில் தீவிரவாதம் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது பற்றி உங்களது கருத்து என்ன ?
20 அல்லது 30 இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு சென்றுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அது வெறுமனே அறிக்கை மாத்திரமேயாகும். அவ்வாறு உண்மையில் நடந்துள்ளதா இல்லையான என்பது பற்றி நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவ்வாறானதொரு குற்றச்சாட்டு இருக்குமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையொன்றை மேற்கொண்டு நம்பகமான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் அதற்கு ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்காது.
ஆனால் அது பிரச்சினையல்ல, பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்வதை விரும்பாத மற்றொரு சக்தி காணப்படுவதாகும். அதனை இல்லாமல் செய்ய அவர்கள் விரும்புகின்றனர். பெரும்பான்மை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினைக் கண்டிக்கின்றனர்.
அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினையோ அல்லது வேறு பயங்கரவாத அமைப்புக்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் முஸ்லிம்களையும் பயங்கரவாத அமைப்புக்களையும் தொடர்புபடுத்தி முரண்பட்ட, பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு எதிர்ப்புணர்வை ஏற்படுத்த முனைவோர் இலங்கையில் நிலவும் சமாதான சகவாழ்வை இல்லாமலாக்குவதற்கு எந்த வகையிலும் முயற்சிசெய்யாத மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தினையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்த முற்படுகின்றனர்.
முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன என்பதை உங்களால் மறுக்க முடியாது. எமக்குள்ள சந்தேகம் என்னவென்றால், இவ்வாறான சக்திகள் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலினை வெற்றியடையச் செய்வதற்கு பணியாற்றுகிறார்களா என்பதாகும்.
இவர்களுக்கு எவ்வாறு நிதி கிடைக்கின்றது, எவ்வாறு அவர்கள் தமது இயக்கத்தைக் கொண்டு நடாத்துகிறார்கள் என்பது பற்றி புலனாய்வுத்துறை விசாரித்தாக வேண்டும்.
அதேபோல் அதன் பின்னணியில் மெஸாட் இருக்கிறதா என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். எமக்கு இந்த விடயத்தில் சந்தேகம் இருக்கிறது. திடீரென ஆரம்பித்த தீவிரவாதம் திடீரென தணிந்தது. அது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது சந்தேகத்திற்கிடமான செயற்பாடாகும். எனவே, இக் குழு வேறொரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படுகின்றது என்பது அந்த நிகழ்வின் மூலம் தெளிவாகத் தெரியவருகின்றது.

கே: கடந்த சில வாரங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் ஞானசார தேரோவினால் வழிநடாத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதன் மூலம் சட்ட அமுலாக்கத்தில் சில பிரச்சினைகள் இருக்கின்றன என நீங்கள் நினைக்கவில்லையா?
சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும், சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சரும் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இரண்டாம் நிலையிலுள்ளவர்கள் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பதில்தான் பிரச்சினை காணப்படுகின்றது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸார் ஏன் தயங்குகிறார்கள் என்பதுபற்றியே நாம் கவலை கொண்டுள்ளோம். முஸ்லிம் ஒருவர் புத்தரைப் பற்றியோ அல்லது சிங்கள சமூகத்தைப் பற்றியோ தரக்குறைவாகப் பேசினார் என வைத்துக்கொண்டால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸார் பாராமுகமாக இருந்திருப்பார்களா என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது.
பொலிஸார் அதற்கெதிராக நிச்சமாக நடவடிக்கை எடுப்பார்கள்; ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்தது. இருந்தபோதிலும், இந்த தீவிரவாதிகள் இஸ்லாத்தின் தூதரை தரக்குறைவாகப் பேசியமையானது பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையைத் தந்துள்ளது.
ஆனால் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அவ்வாறான தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் ஏன் தயங்குகிறார்கள்? ஏன் அவர்கள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் ? நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டத்தை சமமாக அமுல்படுத்துவதாக நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். அரசியல்யாப்பிற்கு அமைவாக, சட்டத்திற்குட்படாது எவரும் இருக்க முடியாது.
ஒரு நபரின் தராதரத்தை கருத்திற்கொள்ளாது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியிருக்கும். சட்டம் மற்றும் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சருடன் நாம் உரையாடியபோது அவர் கூட எவரேனும் சட்டத்தை மீறுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

கே: சிரேஷ்ட அமைச்சர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் ஞானசார தேரர் மறைந்திருப்பதாக கூறப்படுகிறதே அது உண்மையா?
இது தொடர்பில் நானும் கேள்விப்பட்டேன். எனினும், ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த அரசாங்கத்திலுள்ள எந்த அமைச்சருக்கும் காரணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அவ்வாறு யாரேனும் உதவியதாகக் கண்டறியப்பட்டால் அவர் தனது அந்தஸ்தை இழப்பார். தேவையில்லாமல் எந்த ஒரு அமைச்சரும் தனது அந்தஸ்தை இழக்க விரும்புவாரா? ஞானசார தேரருடன் தொடர்பினை பேணியவர்களது வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை.
உண்மை என்னவென்றால் ஞானசார தேரருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் தமது வாக்குகளை இழப்பார்கள்.

கே: எவ்வாறெனினும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினுள் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன அப்படியா ?
ஆம், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். எவ்வாறாயினும், எவரும் பாஸிச மற்றும் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. ஞானசார தேரர் முஸ்லிம்களை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தின் எந்த ஒரு அங்கத்தவரும் அவ்வாறான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுள் எவரும் தீவிரவாதம் மற்றும் பாஸிசத்தை வெளிப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, சட்டத்திலிருந்து ஞானசார தேரரை காப்பாற்றுவதன் மூலம் எவரும் நன்மையடைந்துவிட முடியாது. அவர்கள் தற்போது அனுபவித்துவரும் நலன்களை இழப்பார்கள். ஞானசார தேரரை அருகில் வைத்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோட்டாபய ஆகியோருக்கும் இதுதான் நடந்தது. அவர்களிடம் இருந்ததை இழந்தார்கள்.

கே: இறுதியாக வேறு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
பௌத்த தீவிரவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். தாம் பௌத்த மதத்தையும் பௌத்தர்களையும் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது பௌத்தர்களாலேயே நிராகரிக்கப்பட்டனர்.
அவர்கள் இலங்கை மக்களில் ஒரு வீதத்தினரைக்கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறானவர்களின் எதிர்ப்புணர்வுக் கோஷங்களுக்கு தலைசாய்க்கத் தேவையில்லை. அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானோராவர். அவர்களால் பெரும்பான்மையைப் பெற முடியாது. தீவிர செயற்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை அச்சநிலையில் வைத்திருக்க முனைகின்றனர்.
அரசாங்கம் என்ற வகையில் எம்மால் இதனை அனுமதிக்க முடியாது. வெவ்வேறு கருத்துக்கள் தொடர்பில் சகிப்புத்தன்மையினை வெளிப்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை, ஆனால் தீவிர செயற்பாடுகளினால் அச்சுறுத்த முடியாது. தீவிரப் போக்கு அனைத்து சமூகத்திலும் காணப்படுகின்றது. வடக்கில் அது தலைதூக்கியதை நாம் பார்த்தோம். தமிழ் மக்களில் ஒரு குழுவினர் இலங்கையிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமென விரும்பினர்.
ஆனால் தமிழ் மக்கள் அதனை நிராகரித்ததோடு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். இந்த நிலைமைதான் அனைத்து சமூகங்களிலும் காணப்படுகின்றன. அவர்களுள் சிறு குழுவினரே தீவிரப் போக்கை வெளிப்படுத்துகின்றனர். பெரும்பான்மையினர் அதனை நிராகரிக்கின்றனர்.
அதேபோல, 2015ஆம் ஆண்டு நாம் செய்ததுபோல இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களிலுமுள்ள பெரும்பான்மை மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில சிறிய சக்திகளின் தீவிரப்போக்கை தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்.

No comments