எகிப்தியர்கள் சிரிய போராட்டத்தில் பங்கெடுப்பதற்குத் தடை இல்லை – ஜனாதிபதி செயலகம்
எகிப்தியர்கள் சிரிய போராட்டத்தில் பங்கெடுப்பதற்குத் தடைகள் இல்லை என்றும் அவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது அதற்காகத் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் எகிப்தின் ஜனாதிபதி செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிரிய புரட்சியாளர்களுடன் இணைந்து போராடுவதற்காகச் செல்லும் எகிப்தியர்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி ஏ.பி செய்தி நிறுவனம் வினவியபோது, பயணிப்பதற்கான உரிமை அல்லது பயணிப்பதற்கான சுதந்திரம் அனைத்து எகிப்தியர்களுக்கும் இருப்பதாக காலித் அல்கஸ்ஸாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2011 புரட்சிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இழைப்பவைகளுக்காத் தண்டிக்கும் வழக்கம் எகிப்தில் இலலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து ஜனாதிபதி முர்ஸியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலொசகரான இவர் சிரியாவில் இருக்கும் எகிப்தியர்கள் எகிப்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவர் என ஜனாதிபதி செயலகம் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் உலகின் செல்வாக்குமிகு எகிப்திய அறிஞரான கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி, சிரிய ஜனாதிபதி பஷர் அல்அஸதுக்கு எதிராக போராடுமாறு உலகெங்கிலுமுள்ள ஸுன்னி முஸ்லிம்களை வேண்டியதன் பிறகே காலித் அல்கஸ்ஸாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(MP)
No comments