கசினோ வர்த்தகத்தை மேற்கொள்ள வெளிநாட்டவருக்கு அனுமதியில்லை!– அரசாங்கம்
கசினோ வர்த்தகத்தை மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டுப் பிரஜைகளுக்கோ இலங்கையில் கசினோ வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் பாரிய கசினோ வர்த்தக மையமொன்று அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கசினோ மையமொன்றை அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஹோட்டல்கள் அமைக்கப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உள்ளுர் வர்த்தகர்கள் இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கசினோ வர்த்தகத்தை ஊக்குவித்தால் வீதியில் இறங்கி போராடப் போவதாக கண்டி அஸ்கிரி பீடாதிபதி உள்ளிட்ட பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments