Breaking News

அமெரி்க்காவின் ரகசிய செயல்பாடுகள்: காட்டிக்கொடுத்த மாஜி சி.ஐ.ஏ. அதிகாரி!

news_11-06-2013_38amerஅமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் டேட்டாக்களை தேசிய பாதுகாப்பு ஏ‌‌‌‌‌ஜென்சி சேகரித்து வைததுள்ளதாகவும் அது தொடர்பான ரகசியங்களை கசியவிட்ட உளவுத்துறை மாஜி அதிகாரி திடீரென மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ,தேசிய பாதுகாப்பு ‌ஏஜென்சி, (என்.எஸ்.ஏ), சமூக வலை தளங்களான பேஸ்புக், கூகுள், யாகூ, ஆகியவற்றில் அமெரிக்கர்கள் வெளிநாட்டவர்களுடன் மேற்கொண்ட தகவல் பரிமாற்ற டேட்டாகள், மற்றும் அமெரிக்கர்களின் தொலை பேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவே இந்த நடவடிக்கை என அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது.

மாஜி சி.ஐ.ஏ.அதிகாரி ஹாங்காங்க் ஓட்டம்

இந்நிலையில் தி கார்டியன் எனும் பிரிட்டனின் முன்னணி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.‌ஏ.யின் முன்னாள் அதிகாரி எட்வர்டு சுனேவ்டன் (29), அமெரிக்காவின் ராணுவ மையமான பூஸ் ஆலன் ஹாமில்டனில் தகவல் தொழில்நுட்பப்பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இவர் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. மேற்கொண்டிருந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் தொலை பேசி உரையாடல்கள், இ‌ணையதள டேட்டாக்கள் உள்ளிட்ட தகவல்களையும் பகிரங்கமாக கசியவிட்டதாக அவர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த மாதம் இவ‌ரது நடவடிக்கையினை அமெரிக்கா கண்காணித்து வந்துள்ளது. எட்வர்டு சுனோவ்டன் மீது நடவடிக்கை எடுத்து விசாரிக்க நீதித்துறை முடிவு செய்தது. இதனை அறிந்த எட்வர்டு சுனோவ்டன், விசாரணை அதிகாரிகளின் கண்களின் மண்ணை தூவி விட்டு ஹாங்காங் தப்பிச்சென்றார். கடந்த மே 20-ம் தேதி 90 நாட்கள் விசா பெற்று ஹாங்காங்கில் ‌தஞ்சமடைந்துள்ளார். இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கு ஆதாராமாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரி எங்கே ?

அந்த வீடியோவில் ஹாங்காங் நிர்வாகம் என்னை பாதுகாக்கும் , என்னை நாடு கடத்தி அமெரிக்காவிடம் ஒப்படைக்காது என நம்புகிறேன் என்றார் பீதியுடன். மேலும் அவர் அந்த வீடியோவில் பேசுகையில், அதிபர் ஒபாமா மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை. அவரது பிடியின் கீழ் உள்ள ‌என்.எஸ்.ஏ. அமைப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை மக்களிடம் தெரிவிக்கவே நான் காட்டி‌கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.இவ்வாறு அந்த வீடியோவில் பேட்டியளித்துள்ளார்.இந்நிலையில் எடர்வர்டு சுனோவ்டன் ஹாங்காங்க்கில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அமெரிக்கர்கள் மத்தியில் அதிர்‌ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிபர் ஒபாமாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments