Breaking News

பௌத்தத்தை பொதுபலசேனா துஷ்பிரயோகம் செய்கிறது! ரொஹான் குணரட்ன

Rohan Gunarathnaபொதுபல சேனா தனது அரசியல் நலனுக்காக பௌத்தத்தை துஸ்பிரயோகம் செய்துவருவதாக சிங்கப்பூர் சர்வதேச கற்கைகள் கல்லூரியின் விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ”மீள் இணக்கம்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா சமயம் சார்ந்த அமைப்பு அல்ல என்றும், இது அரசியல் அமைப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது அரசியல் இலாபத்திற்காக சமயத்தை அந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்கிறது என்றும், இலங்கையில் இனப்பிரச்சியை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகளே என்றும் இவர்கள் சுயநல அரசியலுக்காக இதனை உருவாக்கினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே தான் வேற்றுமையைக் காணவில்லை என்றும், எனினும், அரசியல்வாதிகளிடமும் இனவாதிகளிடமும் வேற்றுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments