Breaking News

உதயன் பத்திரிக்கையை தாக்கியது கோத்தபாயவின் ஆயுதக்குழுவே - மங்கள சமரவீர

mangala-seithy-2-150 "பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக்குழுவினரே 'உதயன்' பத்திரிகை மீது தாக்குதல் நடத்தியதுடன், குடாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் பங்குபற்றிய உண்ணாவிரதப் போராட்டத்திலும் குழப்பம் விளைவித்தனர் என்பதை நான் பொறுப்புடன் கூறுவேன்" இவ்வாறு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். "இந்த ஆயுதக் குழுவில் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸார் மேலும் பலரும் இருக்கின்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியலை என்னால் தரமுடியும். இருப்பினும், அவற்றை வெளியிட முடியாத நிலையில் ஊடகங்கள் இருக்கின்றன. அதனால் ஊடகங்களின் மீது நாம் குற்றங்கூற முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments