Breaking News

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸார் மீது குற்றச்சாட்டு

AHRC விசாரணைகளின் போது பொலிஸார் கைதிகளை சித்திரவதைக்குட்படுத்துகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

விசாரணைகளின் போது கைதிகளின் கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் மீது பொலிஸார் மிளகாய் தூள் வீசி சித்திரவதை செய்வதாக தமக்கு இதுவரை 400 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,

அவற்றை புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் உயர் அதிகாரியும் சட்டத்தரணியுமான பசில் பெர்ணாண்டோ பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பசில் பெர்ணாண்டோ,

சித்திரவதைக்கு எதிரான ஜக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்ததில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும் பொலிஸார் குறித்த சட்டத்தினை மீறி செயற்பட்டு வருகின்றதாகவும், இதனால் ஜக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிஸார் விசாரணைகளின் போது கைதிகளை சித்திரவதைக்குட்படுத்துகின்றமை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும்,

பொலிஸார் ஜனநாயக முறைகளுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments