13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அவசர சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் திருத்தச் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
கொழும்பில் இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய அதி உயர் பீடக் கூட்டமொன்றை கூட்டி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஆதரவளிக்க மாட்டோம்: முஸ்லிம் காங்கிரஸ்
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ஆதரவளிக்க மாட்டோம் என ஆளும் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
உத்தேச திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராகவே வாக்களிப்போம் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானம் காரணமாக தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பது குறித்தும் கவனம் செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் கூட்டணியில் நீடிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதே செய்திச் சேவையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments