Breaking News

13ஆம் அரசமைப்பிற்கெதிராக அணிதிரண்டுள்ள 37 சிங்கள அமைப்புகள்!

xxf மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன.

”சிங்கள பெளத்த சக்திகள்” தலைமையிலான 37 சிங்கள தேசிய அமைப்புகள் இணைந்து ”மாகாண சபைகளுக்கு எதிரான தேசிய ஒன்றியம்” என்ற பெயரில் புதிய அமைப்பை நிறுவியுள்ளன.

ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டிலும், தலையீட்டிலும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

”மாகாண சபைகளை இரத்துச் செய்யும் செய்யும் போராட்டத்தை வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் கருத்தலை ஒன்றைக் கட்டியெழுப்பி, நாடாளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்த புதிய அமைப்பின் நோக்கம் என அமைப்பின் ஏற்பாட்டாளரான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதான நகரங்களில் ”மாகாண சபைகளுக்கு எதிரான” கூட்டங்களை நடத்தவும் அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

No comments