13ஆம் அரசமைப்பு திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் எதிர்ப்பை அரச தலைவரிடம் எழுத்துமூலம் சமர்ப்பிக்கிறது!
13ஆம் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை எழுத்துமூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) சமர்ப்பிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பில் உள்ள சந்தர்ப்பத்தை தடுப்பது, மாகாண சபையோடு தொடர்புடைய சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற அனைத்து மாகாண சபைகளிலும் அனுமதி பெறாது பெரும்பான்மை சபைகளில் அனுமதி பெறுதல் போன்ற சட்டத் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திருத்தம் அமைச்சரவையில் சமர்பிக்கவிருந்த போதும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வாசுதேவ நாணயக்கார உட்பட சில இடதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டதால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments