அமைச்சர்களான ராஜித, வாசு, திஸ்ஸ, டியூ ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: பொதுபல சேனா
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதிகளின் பக்கம் செயற்பட்டு வரும் சிலர் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைக்க தடை ஏற்படுத்துகின்றனர். மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது.
இந்த நாட்டின் மெய்யான உரிமையாளர்கள் சிங்கள மக்களே. நாட்டில் தங்க வந்தவர்கள், சிங்கள மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனர். எந்தவொரு நாட்டின் ஒப்பந்தத்தையும் நாம் நிறைவேற்றவில்லை. மெய்யான தேசப்பற்றாளர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கலபொடத்தே ஞானசாரே தேரர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே ஞானாசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments