மாகாண சபைகளை பலவீனப்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.கா.
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டால் வழக்குத் தொடர நேரிடும் என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்யும் உத்தேச திட்டத்தை கட்சி ஏற்றுக்கொள்ளாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்க்கப் போவதாக கடந்த 11ம் திகதி நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற குழு ஏகமனதாகத் தீர்மானித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments