13இல் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பான கலந்துரையாடலில் மு.கா. பங்கேற்கும்
13 ஆவது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி பங்கேற்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டம் இன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
No comments