ஊடகவியலாளர் எக்னெலிகொட பிரான்ஸில் இல்லை - பிரான்ஸ் தூதரகம் அறிவிப்பு!
இலங்கையில் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொட தமது நாட்டில் வசிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்திக்க பெர்ணான்டோ, தமக்கு பிரான்ஸில் வசிக்கும் இலங்கை ஊடகவியலாளர் வெடிவர்த்தன என்பவர், பிரகீத் லியனகேயை அறிமுகப்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார். எக்னெலிகொட, தலைமை மொட்டையடித்து ஆள் தெரியாத நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் அருந்திக்கவின் தகவலை, ஊடகவியலாளர் வெடிவர்த்தன மறுத்திருந்தார். அருந்திக்க பொய் கூறுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே பிரான்ஸ் தூதரகமும் தமது தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை அருந்திக்கவின் தகவல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு ஊடக நிறுவனங்களும் கட்சிகளும் அரசாங்கத்தை கோரியுள்ளன.
No comments