Breaking News

மொத்த தேசிய உற்பத்தில் 28.7 வீதம் (2178 பில்லியன் ரூபா) அமைச்சர்களுக்காக செலவு!

Ministers அமைச்சரவை அந்தஸ்துள்ள 65 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களின் செலவுகளுக்கு 2012ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 28.7 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு கடந்த வருடம் மாத்திரம் 270,727 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர்களுக்கு மாத்திரம் 2012ஆம் ஆண்டில் 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, மொத்த தேசிய உற்பத்தி 7582 பில்லியன் ரூபா எனவும், இவற்றில் 2178 பில்லியன் ரூபா அமைச்சர்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 28.7 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது பிரதமர் டி.எம். ஜயரத்ன வழங்கிய பதில்களுக்கமைய இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments