நிகாப் மற்றும் புர்காவுக்கு எதிராக மீண்டும் ஆடத் தொடங்குகிறது பொதுபல சேனா
முஸ்லிம்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளுக்கு பௌத்த பேரினவாத அமைப்பான பொது பல சேனா மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொது பல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், இலங்கையையும் மத்திய கிழக்கு நாடாக மாற அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் இவ்வாறான உடைகளை அணிவதை இலங்கையில் தவிர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில உள்நாட்டு வங்கிகள் தங்களுடன் தொடர்பு கொண்டதாவும், சில பெண்கள் இவ்வாறு முழுவதுமாக மறைத்து ஆடை அணிந்து வருவதால், தங்களுக்கு சிக்கல் இருப்பதாக தெரிவித்ததாகவும், குறிப்பிட்டார்.
இவ்வாறான பெண்கள் முகத்தை முழுவதும் மறைத்துள்ள நிலையில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதிருப்பதாகவும், முகத்தை காட்ட சொன்னால் அவர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments