13 ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் கட்சிகள் சுயாதீனமாக செயற்படலாம்: ஜனாதிபதி
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகள் தமது கருத்துக்களை சுயாதீனமாக தெரிவிக்க முடியும். இந்த விடயத்தில் யாரும் அநாவசியமாக தலையீடுகளை மேற்கொள்ள மாட்டார்கள். அதனூடாகவே புதிய அரசியலமைப்பில் செயற்பாட்டிலும் சுயாதீனமாக செயற்பட முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.
மேலும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற செயற்பாடுகளில் சுயாதீனமாக செயற்பட எவ்விதமான தடையும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று மாலை தனித்தனியே ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதியின் பேச்சாளர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி.யினர் நேற்று மாலை அலரிமாளிகையில் தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தினார். இதன்போது 13ஆவது திருத்தச் சட்டம் உட்பட அரசியலமைபில் கொண்டுவரப்படுகின்ற திருத்தங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட முடியும் என ஜனாதிபதி கூறினார். குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தத்தமது கருத்துக்களை சுயாதீனமாக தெரிவிக்க முடியும். யாரும் அநாவசியமாக தலையீடுகளை மேற்கொள்ள மாட்டார்கள். அதனூடாகவே புதிய அரசியலமைப்பில் செயற்பாட்டிலும் சுயாதீனமாக செயற்பட முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி.யினருக்கு தெரிவித்தார் என கூறினார்.
No comments