ஒசாமா பின்லேடனை கொலை செய்ய சூத்திரதாரியாக செயற்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க சிக்காக்கோ இலிகோயிஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் எனவும் அணுமின் தொழிநுட்ப பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வின் பின்னரே இத்தகவல் வெளியாகியுள்ளது. சிவலிங்கம் சிவநாதன், ஒசாமா பின்லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளதுடன் நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களையும் இவரே தயாரித்துள்ளார்.
இப்படியான திறமையாளர்கள் அமெரிக்காவுக்கு வந்து பணியாற்றுவது மதிப்புக்குரியது என அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க் தெரிவித்துள்ளார்.
Post Comment
No comments