பிரதிப் பொலீஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன கைது செய்யப் படலாம்..?
பிரதிக் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட கொழும்பு பிராந்தியத்தின் பிரதிக் பொலிஸ் மா அதிபராக வாஸ் குணவர்தன கடமையாற்றி வருகின்றார்.
பம்பலபிட்டியைச் சேர்ந்த முஹமட் சியாம் என்ற வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் வாஸ் குணவர்தனவிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அவர் நாளை நாடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பியதன் பின்னர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்திற்காக பெரும் எண்ணிக்கையிலான பணம் கைமாறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கஹாவத்தை படுகொலைச் சம்பங்கள் மற்றும் கொழும்பு பாதாள உலகக் கோஷ்டியினரை கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை குழுவே இந்த வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்:
No comments