களியாட்ட நிலையத்தை எப்போது முற்றுகையிடுவீர்கள்: பொது பல சேனாவிடம் வினவுகிறார் அமில தேரர்
கொழும்பு கோட்டை - மகா போதி விகாரைக்கு அருகில் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெகர் முதலிட்டு நிர்மாணிக்கவுள்ள களியாட் நிலையத்தை எப்போது முற்றுகையிடுவீர்கள் என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனை அமைத்த பின்பு அதனை முற்றுகையிடுவீர்களா? அல்லது தற்போதே அதற்கான எதிர்ப்பை வெளியிடுவீர்களா என செய்தியாளர் சந்திப்பொன்றில் சிங்கள கடும்போக்கு அமைப்புக்களிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராவண பலய , பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் அப்பாவி வியாபாரிகளின் கடைகளை முற்றுகையிடுவதாக இதன்போது சுட்டிக்காட்டிய தேரர் , கோட்டை - மகா போதி விகாரைக்கு மிக அருகில் நிர்மாணிக்கப்படப் போகும் குறித்த சூதாட்ட நிலையத்துக்கு எப்போது எதிர்ப்பை வெளியிடப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இது தொடர்பில் தமது அமைப்பு வெகு விரைவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments