கராபிடியவில் முஸ்லீம்களை வெளியேற்ற முயற்சி : பாதிக்கப் பட்டோர் சார்பாக சட்டத்தரனிகள் நடவடிக்கை
காலி கராபிடிய வைத்திய சாலைக்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் குடியிருப்பை அகற்ற இன்று நகர அபிவிருத்தி அதிகார சபை பொலீஸாரின் உதவியுடன் முயற்சித்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக இவ்விடத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
இன்று இங்கு விஜயம் செய்த குழுவினர் புல்டோசர்கள் சகிதம் குடியிருப்பை அகற்ற முற்பட்டுள்ளனர். இதன்போது பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன் போது முஸ்லீம் பெண்கள் அதிகாரிகளால் அச்சுருத்தப்பட்டுள்ளனர்.
இது பாதுகாப்புச் செயளாலரின் பனிப்பு, இதனை தாம் நிறுத்தப் போவெதில்லை. தடுத்தால் உங்கள் உடல்களின் மேலால் புல்டோசர்களை ஏற்றுவோம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அத்தோடு அன்டிய சில பகுதிகள் டோசர் பன்னப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது. பின்னர் மக்கள் சட்டத்தரனிகளின் அலோசனப்படி பொலீசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தற்போது இந்த மக்கள் சார்பாக உதவுவதற்கு இரண்டு முஸ்லீம் ஜனாதிபதி சட்டத்தரனிகள் முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சட்டத்தரனிகள் சிலர் இடத்திற்கு நேரடியாக சென்றுள்ளனர். இவர்கள் சார்பாக அடிப்படை உரிமை மீரல் வழக்கொன்று தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன.
No comments