ஐ.தே.க உடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இக் கருத்தை முஸ்லீம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார பரவலாக்கல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சி தமது உத்தேச அரசியல் யாப்பை அறிமுகம் செய்துள்ளது. தமது கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இந்த அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த அரசியல் யாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹசன் அலி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இதுவரையில் தங்களை அனுகவில்லை என்றும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
No comments