Breaking News

காத்தான்குடிக்கு - கல்முனைக்கு - சம்மாந்துறைக்கு - அம்பாறைக்கு என தனியான சட்டங்களாக இருக்க முடியாது: பொதுபல சேனா

bbs022013 காத்தான்குடிக்கு ஒரு சட்டமும், கல்முனைக்கு ஒரு சட்டமும், சம்மாந்துறைக்கு ஒரு சட்டமும், அம்பாறைக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது, சட்டம் அனைத்து இடங்களிலும் ஒரே விதமாக இருக்கவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் அம்பாறை மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அல்ல தற்போது நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான முஸ்லிம் அடிப்படைவாதம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை இல்லை என்று எவருக்கும் கூற முடியாது. நாடும், மக்களும் ஆபத்தான இடத்தில் உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு இது புரியாவிட்டாலும் எமக்கு நன்கு புரிந்துள்ளது.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க உடன்படிக்கை கையெடுத்திடப்படுகின்றன. உலாமக்களை பயிற்றுவிக்கவே இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. அதன் பெயர் மலிக் அப்துல்லா பல்கலைக்கழகம் என்பதாகும். மலிக் அப்துல்லா என்பவர் சவூதி அரேபிய மன்னர். உலாமக்களுக்கு பயிற்சியளிக்க தேவையானால், புதிய பல்கலைக்கழகம் அமைக்க தேவையில்லை. ஒழுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்pல் ஒரு பீடமாக அதனை ஆரம்பிக்க முடியும். அதனை நாங்கள் எதிர்க்க போவதில்லை. இந்த ஆபத்தான அடிப்படைவாதத்தில் இருந்து கிழக்கையும், முழு நாட்டை காப்பாற்றும் போராட்டத்தை அம்பாறையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments