13ஆவது திருத்தம் குறித்து காரசாரமான அமைச்சரவைக் கூட்டம்!
13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்வது என்ற யோசனை குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும், சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகரவிற்கும் இடையில் மிகக்கடுமையான சொற்பிரயோகங்களுடன் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
13ஆவது அரசமைப்பை வலுவிழக்கச் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டிலுள்ள அமைச்சர் டியூ குணசேகரவிற்கும், 13ஆவது அரசமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் இருக்கும் விமல் வீரவங்கவிற்கும் இடையே நடைபெற்ற இந்த கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் அமைச்சரவையை அதிரவைத்துள்ளது.
இவ்வாறு சில தரப்பினருக்கிடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவையில் இணக்கம் காணப்படாத 13ஆவது அரசபைப்பின் திருத்த யோசனைகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளைப் பெயரிட்டு, மறுதினம் புதன்கிழமையே இதனை செயல்படுத்த எண்ணியுள்ளதாகவும், இதுகுறித்து சபாநாயகருக்கு அறிவித்து இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments