Breaking News

குடும்ப கட்டுப்பாட்டினை அதிகம் கடைபிடிப்பவர்கள் சிங்களவர்கள்:நந்தமித்ர

Nandamithra குடும்ப கட்டுப்பாட்டினை அதிகமாக பின்பற்றுபவர்கள் சிங்களவர்களே என உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இந்நிலைமை நீடிக்குமானால் சிங்கள சமூகம் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை பொருத்தவரை சிங்களவர்களின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஏனெனில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தினை அதிகம் அமுல் செய்பவர்கள் சிங்கள பெளத்தர்களே. 

குடும்ப கட்டுப்பாட்டு உபகரணங்களை விற்பனை செய்வோர் கூறும்,  'சிறிய குடும்பம் தங்கமானது' என்ற வாசகத்துக்கு சிங்கள பெளத்தர்கள் மயங்கிவிட்டனர்.

பிள்ளைகள் கூடிவிட்டார்கள் என்பதற்காக பொருளாதார சுமை ஏற்படப்போவதில்லை. ஏனெனில் மரத்தில் காய்கள்  கூடும் போது  அது ஒரு போதும் மரத்துக்கு பாரமாக இருக்காது. என தெரிவித்துள்ளார்.

No comments