ஸ்னோவ்டனை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப் போவதில்லை
அமெரிக்க உளவுத் தகவல்களை கசியவிட்ட முன்னாள் சீ.ஐ.ஏ உத்தியோகத்தர் எட்வர்ட் ஸ்னோவ்டனை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப் போவதில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.
குறித்த நபரை விமானங்கள் ஏற்றிவரக் கூடாது என விமான நிலையங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்னோவ்டனிற்கு பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஸ்னோவ்டனின் புகைப்படம், பிறந்த திகதி, கடவுச் சீட்டு இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான பிரஜைகளின் தொலைபேசி அழைப்புத் தகவல்களை இணைய தொடர்பாடல்களையும் உளவு பார்த்ததாக ஸ்னோவ்டன் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஸ்னோவ்டன் ஹொங்கொங்கில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஸ்னோவ்டன் தற்போது ஏதேனும் ஓர் நாட்டில் புகலிடம் கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments