முஸ்லிம் காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசிய மொஹமட் முசம்மிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
தமது கட்சியின் நிலைமை தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் இந்த விடயம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் திடீர் மரணம் மற்றும் தற்போதைய தலைவர் ரஃப் ஹக்கீம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை ஆகிய செயற்பாடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
No comments