Breaking News

ரணில் உள்ளிட்ட குழு மீது கொலைவெறித் தாக்குதல்!

ranil-unp-300x225 எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்று (11) மாலை 4.30 அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மீன்பிடி தொழிலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர். அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

No comments