Breaking News

மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன பிரதேசத்தில்  அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதன் போது ஹிறா பவுண்டேன் நிறுவனத்தனின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சின் செயலாளரும், கைச்சாத்திட்டனர்.

அவர்களோடு இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகரும் ,சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளருமான  சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி மோகன்லால்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ஸ் ,காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட உலமாக்கள்,கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள் ,தெண் கிழக்கு பழ்கழைக்கழக உபவேந்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதம மற்றும் விஷேட அதிகளாக கலந்து கொண்ட இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகரும் ,சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளருமான  சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் ஆகியோருக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிவைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.

இங்கு மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்  இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி :

உலமாக்களுக்கு பல்கலைக்கழகமா? விடமாட்டோம் என்கிறது பொது பல சேனா: அம்பாறையில் முழக்கம்

(VD)

No comments