அஷ்ரபின் மரணத்திலும் ஹக்கீமின் தலைமைத்துவத்திலும் சந்தேகம்: முஸம்மில்
அமைச்சர் அஷ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ஹக்கீம் கைப்பற்றியதாக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் முஹம்மட் முஸம்மில் தெரிவித்தார்.
அஷ்ரபின் மரணத்திலும் ரவூப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைப்பற்றியதிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவூப் ஹக்கீம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை செய்யும்போது இந்த ஹக்கீம் எங்கு போனார். கிழக்கில் முஸ்லிம்களது காணி சொத்துக்களை சூரையாடும்போது எங்கு போனார்.
ஹக்கீம் கூட்டமைப்பின் முகவராக செயற்படுகின்றார். அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் முஸம்மில் மேலும் தெரிவித்தார்.
(NM)
No comments