தண்ணீர் கோப்பையில் முதலைகளை காணும் ஆட்சியே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. - கரு ஜயசூரிய

Karu-6அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை யாரும் எதிர் விமர்சனம் செய்தால் அது ராஜத் துரோகமாக கருதப்படுகின்றது. அன்று பயங்கவரவாதிகளை இல்லாதொழிக்க பயன்படுத்தப்பட்ட சட்டமானது, இன்று எதிர்க் கட்சியினரையும், மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரையும் அடக்கி ஒடுக்கப் பயன்படுகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தண்ணீர் கோப்பையில் முதலைகளை காணும் ஆட்சியே தற்போது நாட்டில் காணப்படுகின்றது அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது ஜனநாயக நாடொன்றின் முக்கிய பண்பியல்பாகும். அரசாங்கத்தை விமர்சனம் செய்யவும், சுதந்திரமான முறையில் அரசியல் செய்யவும் மக்களுக்கு அனுமதியிருக்க வேண்டும். எனினும், சர்வாதிகார நாடொன்றில் இந்த பண்பியல்புகளை காண முடியாது. தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஏகாதிபத்திய ஆட்சிக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments