இன்று வாக்காளர் தினம்
இன்றைய தினம் (01.06.2013) தேர்தலகள் செயலகத்தால் வாக்காளர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்கில் இந்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. இதற்கா நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் தினைக்கள ஊழியர்கள் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வர்கின்றனர்.
தேருனர் இடாப்பு ஒவ்வொறு வருடமும் புதுப்பிக்கப் படுகிறது. எனவே ஒவ்வொறு ஆண்டும் மக்கள் தமது பெயர்களை அதற்கக்க தமது கிராம சேவகர் அல்லது விஷேட கணக்கெடுக்கும் உத்தியோகத்தர் மூலம் பதிவு செய்துகொள்ளல் வேண்டும். அத்தோடு இந்த தேருனர் இடாப்பானது தேர்தல் நடவடிக்கைகளுக்கு மாத்திரமன்றி,
- தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தல்
- மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்தல்
- பல்கலைக்கழக நுழைவு
- அரச சேவையில் இனைந்துகொள்ளலின் போது
- நீதிமன்ற நடவடிக்கைகள்
போன்ற பல்வேறு அம்சங்களில் முக்கிய அங்கீகரிக்கப் பட்ட ஆவனமாகக் கருதப் படுகிறது. அரச துறை மாத்திரமன்றி தற்போது தனியார் துறையினரும் இதனை ஒரு முக்கிய ஆவனமாக கருதுகின்றனர். என்றாலும் மக்கல் இது தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஓர் ஆவனமாகவே கருதுகின்றனர்.
இவ்வாறான விடயங்களை மக்களுக்குத் தெளிவு படுத்தும் நோக்கிலேயே இந்த “வாக்காளர் தினம்” பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
Post Comment
No comments